சென்னை; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2023-க்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்க உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்கள் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வழங்கவும் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வழங்கவும் உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் சாதனை ஊக்கத் தொகை பெற தகுதியற்றவர்கள் எனவும் போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.