அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த காவலாளி? வீடியோ வைரல்

பட்டுக்கோட்டை: அரசு மருத்துவமனையில் காவலாளி ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும், வீடியோ வைரலானது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவுட்சோர்சிங் ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்து வருபவர் கண்ணபிரான் (30). இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கட்டு கட்டும் அறைக்குவந்த ஒருவருக்கு காலில் வந்த ரத்தத்தை பஞ்சை வைத்து துடைத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மீனா கூறுகையில், இந்த வீடியோ குறித்து சம்மந்தப்பட்ட அவுட்சோர்சிங் காவலாளி கண்ணபிரானிடம் விளக்கம் கேட்டபோது, ரத்தத்தை பஞ்சால் துடைத்து அருகில் உள்ள குப்பை தொட்டியில் போட்டேன். நான் வேறு ஏதும் செய்யவில்லை என்றார். அது உங்கள் வேலை அல்ல என்று கூறி உடனடியாக அவுட்சோர்சிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். இங்கு கடந்த மாதம் செவிலியர் கண்காணிப்பாளர் ஷீலா நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related posts

விருதுநகரில் இன்று காலை பரபரப்பு ஒர்க்‌ஷாப்பில் பயங்கர தீ 15 டூவீலர்கள் எரிந்து நாசம்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் வெயில் சுட்டெரித்தது

எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கழிவறையில் நின்று பயணம் செய்யும் அவலம்: கூடுதல் பெட்டிகள் இணைக்க மானாமதுரை பயணிகள் கோரிக்கை