அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவனையில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பொது அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு நோயளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவர்களுக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவனையில் ரத்த தான முகாம் நடந்தது.

இதில், மருத்துவ மாணவர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் செய்த மருத்துவ மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சப்-கலெக்டர் நாராயண சர்மா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ஜோதிகுமார், துணை முதல்வர் அனிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாதன், நிலைய மருத்துவர் முகுந்தன், பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் வி.டி.அரசு, மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை