அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இயங்கும் வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை: பயிற்சி கட்டணம் கிடையாது; கலெக்டர் அருணா அறிவிப்பு

சென்னை: அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது, என சென்னை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2 ஆண்டு தொழிற்பிரிவுகள் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல், கட்டிடப்பட வரைவாளர் மற்றும் இயந்திர வரைவாளர், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக். ஓராண்டு தொழிற்பிரிவுகள் இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன், மெக்கானிக் ஆட்டோபாடி பெயின்டிங் மற்றும் டிரோன் பைலட் 6 மாத தொழிற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

10வது தேர்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவர்களும் உடனடியாக தொழிற் நிறுவனங்களிலும், ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு அரசு டாடா டெக்கனாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் உயர் தொழில்நுட்பத்துடன் உரிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளிலும் தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஓராண்டு தொழிற்பயிற்சிகளான மெனபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் & ஆட்டோமேசன், இன்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மெனபேக்சரிங் டெக்னீஷியன் படிப்புக்கு 10, பிளஸ் 2, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

ஈராண்டு தொழிற் பிரிவுகளான பேசிக் டிசைனர் & விர்டியல் வெரிபையர் (மெக்கானிக்கல்), அட்வான்ஸ் சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன் படிப்புகளுக்கு 10, 12ம் வகுப்பு, ஏதாவது பட்டம் படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மாதம் ரூ.750 உதவி தொகை, என்ஐஎம்ஐ பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவி, 2 செட் சீருடைகள் தையல் கட்டணத்துடன், பஸ்பாஸ், ஷூ ஆகியவை தமிழ்நாடு அரசினால் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேருபவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கி பயில விடுதி வசதி உண்டு. நேரடி சேர்க்கைக்கு துணை இயக்குனர்/ முதல்வர், அரசினர் ஐடிஐ, மின்ட், வடசென்னை என்ற முகவரில் நேரில் தொடர்பு கொள்ளலாம். 044-25209268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை