அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

* விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2, SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2/ ஆகும்.

* கட்டணம் செலுத்தும் முறை

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911 ஆகிய எங்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!