அரசு மீண்டும் முறைப்படி அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருக்கிறோம்: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல தயார் என சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் இல்லம் பணிமனை முன்பு சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் பணிமனை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, நத்தம், பரமக்குடி, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல தயார் என சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அரசு எங்களை இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசுதான் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்; நாங்கள் எப்படி அழைக்க முடியும்.

பேச்சுவார்த்தைக்கு தயார் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிக்கிறார்; ஆனால் இதுவரை அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதையும் எதிர்கொள்வோம். போராட்டம் தோல்வி எனில் வெளி ஆட்களை ஏன் ஓட்டுநர்களாக நியமிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார். முறைப்படி அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு வர தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்