அரசு மருத்துவமனை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் லயன்ஸ் கிளப், லியோ கிளப் 2023 – 2024ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சேகர், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மகேஷ், ராமலிங்கம், ராமர், மாவட்ட துணை ஆளுநர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

விழாவில் புதிய தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக தியாகராஜன், பொருளாளராக ஸ்டீபன் ஆகியோர் பொறுப்பேற்று கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக விஜயா, டாக்டர் பிரதீபா, வீரராகவன், ஆசிரியர் பழனி, ஜாஸ்மின் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும், பேரம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளும், 20 ஏழைப் பெண்களுக்கு நல திட்ட உதவிகளும், 40 பேருக்கு இலவச கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.

Related posts

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா