3 அரசு பஸ்கள் ஜப்தி

திருச்சி: திருச்சி அரிமங்கலம் காமராஜ்நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர்கள் சாகுல்அமீது (39), சபீரான் (35). இருவரும் கடந்த 5.8.2018 அன்று மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மோதியதி இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருச்சி சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை மாவட்ட நீதிமன்றம், பலியான சாகுல்அமீதுக்கு ரூ.34 லட்சத்து 2 ஆயிரத்து 300ம், சபீரானுக்கு ரூ.20 லட்சமும் இழப்பீடாக அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்