மேலமையூர் அருகே அடுத்தடுத்த கடைகளில் அரசு பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு: மேலமையூர் அருகே அரசு பேருந்து ஒன்று அடுத்தடுத்த கடைகளில் மோதி விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, அரசு பேருந்து (தடம் எண் 108) வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த பேருந்து வல்லம் பகுதி அருகே, மேலமையூர் ஆர்ச் பகுதியை கடந்து சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக குறுக்கே ஒரு ஆட்டோ வந்துள்ளது. திடீரென ஆட்டோ வந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நிலைதடுமாறி எதிரில் உள்ள ஹார்டுவேர்ஸ் மற்றும் அருகில் உள்ள பஞ்சர் கடையில் புகுந்தது.

இரண்டு கடைகளில் ஆட்கள் உள்ளே இருந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயர்தப்பினர். பேருந்து மோதியதால் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளதாக ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளர் அன்சாரி கூறினார். பஞ்சர் கடையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது. பஞ்சர் கடைக்கு ரூ.1லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், பேருந்து மோதியதில் மேலமையூர் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது மனைவி சுபாஷினி (35) படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!