அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் கவுன்சிலிங் என அறிவிப்பு

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சலிங் டிசம்பர் 20ம் தேதி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, டிசம்பர் 20ம் தேதி, ‘எமிஸ்’ இணையதளத்தில் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மாவட்ட வாரியாக முன் ஆயத்த பணிகள், விறுவிறுப்பாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில், உபரி பணியிடங்களில் உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யுமாறு ஏற்கனவே,உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை என்னும், ‘எமிஸ்’ இணையதளத்தில், பணிநிரவல் கலந்தாய்வு நடத்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி நிரவலுக்கு பிறகும், மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள், காலியிடங்களை, வரும் 29ம் தேதிக்குள்,அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது