அரசு ஊழியரை தாக்கினால் ஓராண்டு சிறை விதித்தால் போதும்: நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: அரசு ஊழியர்களை தாக்கியவர்களுக்கு விதிக்கப்படும் 2 ஆண்டு சிறை தண்டனையை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாட்டில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டம்(ஐபிசி),குற்றவியல் நடைமுறை சட்டம்(சிஆர்பிசி) மற்றும் சாட்சிய சட்டங்களை மாற்றும் வகையில் அதற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா(பிஎன்எஸ்),பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா(பிஎன்எச்எஸ்) மற்றும் பாரதிய சாக்‌ஷியா அதிநியம்(பிஎஸ்ஏ) ஆகிய மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில், இந்திய தண்டனை சட்டத்தின் 353வது பிரிவு, பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 130 உடன் ஒத்திருக்கிறது. பணிக்கு இடையூறு என்ற பெயரில் இந்த சட்ட பிரிவு அரசு ஊழியர்களால் பரவலாக தவறாக பயன்படுத்தப்படுகிறது.

முந்தைய காலங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர்கள் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தண்டனையை குறைக்க வேண்டும்.எனவே பிரிவு 130 சட்டத்தின் கீழான தண்டனையை 2 ஆண்டில் இருந்து ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடவில்லை: இந்திய அணி கேப்டன் கவுர் விரக்தி