அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: மாணவர் நலன் சார்ந்த திட்டங்களால் தனியார் பள்ளியைவிட அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கவே பெற்றோர் ஆர்வமாக உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது பேசிய அவர்; 2021 முதல் திமுக ஆட்சியில் இதுவரை 14.73 லட்சம் விதிவண்டிகள் ரூ.823 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.47 லட்சம் பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை