அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மை ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளி மசோதா: பேரவையில் தாக்கல்

நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று புது மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த புள்ளிகள் சட்டம்-1998, அரசு கொள்முதலில் வெளிப்படை தன்மைக்கு வழிவகை செய்கிறது. அதோடு, ஒப்பந்தப்புள்ளிகளை கோரவும், ஏற்றுக்கொள்வதற்குமான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகிறது. இந்த சட்டப்படி ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகார அமைப்பு, அதற்கான அறிவிப்பை இந்திய வர்த்தக இதழிலும், தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடலாம். அரசின் கொள்கையின்படி, ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்புகளை தினசரி செய்தித்தாள்கள் வெளியிடுவதோடு இணைய வலைதளம் மூலமாக வெளியிடலாம் என்று கருதி, அதற்கேற்ற வகையில் சட்ட திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!