தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் அமைக்க வேண்டும்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே என்.சி.சி முகாமிற்குச் சென்ற 13 வயது மாணவியிடம் அத்துமீறி நடந்ததாக, என்சிசி பயிற்சியாளரான சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் `போக்சோ’ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாட்டு பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

போக்சோ சட்டத்தை கண்காணிக்கின்ற தலைமை அமைப்பான மாநில குழந்தை உரிமைகள் ஆணையம் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கால் செயல்படாமல் இருக்கிறது. இதனை சரி செய்து தமிழ்நாடு அரசு தீவிரமாக செயலாற்றும் மாநில குழந்தை உரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு