அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 கூடுதலாக ஊதியம் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ரூ.20,000 லிருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.25,000 வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு