கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்

கோத்தகிரி: கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி கிராம பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி அமைந்து உள்ள தேயிலை தோட்டத்தில் மற்றும் சாலையில் கரடி முகாமிட்டுள்ளது.

இந்த கரடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் குட்டியுடன் உலா வருகிறது. இவ்வாறு உலா வரும் கரடி பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்து உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடிகளின் நடமாட்டதை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related posts

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் ஈர்க்கப்டுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்