கூகுள் மேப் வணிக பயன்பாட்டுக்கு கொடுக்கும் சேவைகளை தவறாக பயன்படுத்தி மோசடி: மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

சென்னை: கூகுள் மேப் வணிக பயன்பாட்டுக்கு கொடுக்கும் சேவைகளை தவறாக பயன்படுத்தி சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்து வருகிறது. கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு லைக், ரிவியூ, ரேட்டிங் அதிகரிக்க பணம் கொடுப்பதாக கூறி மோசடி செய்து வருகிறது. போலி நிறுவனங்களை கூகுள் மேப்பில் இணைந்து சைபர் கிராம் கும்பல் பொதுமக்களை ஏமாற்றுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடைகள், ஹோட்டல்கள் நிறுவனங்களின் ரேட்டிங்கை கூகுள் மேப்பில் குறைத்து விடுவோம் எனக்கூறி மிரட்டியும் மோசடி செய்து வருகிறது. மோசடிகளை அரங்கேற்றுவதற்கு சைபர் கிரைம் கும்பல் ஒவ்வொரு நாளும் புதுபுது உத்திகளை கையாள்கின்றனர். இணையதளத்தில் மக்களுக்கு கொடுக்கப்படும் சேவைகளில் முறைகேடுகளை செய்து பணம் பறிக்க சைபர் கிரைம் கும்பல் திட்டமிட்டுள்ளது. கூகுள் மேப் அளிக்கும் சேவைகளை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடிகளை துவக்கியுள்ளனர். இதுகுறித்து கூகுள் நிறுவனம் எச்சரித்தும் விதவிதமான மோசடிகளை சைபர் கிரைம் கும்பல் அப்டேட் செய்கின்றனர்.

கூகுள் மேப்பில் தேடலில் ஈடுபடுபவர்களை அவர்கள் அறியாமலேயே மற்றொரு இணையதள பக்கத்திற்கு கொண்டு செல்கின்றனர். கூகுள் மேப் நிறுவனம் தான் இந்த இணையதளங்களுக்கு அழைத்துச் செல்வதாக பயனாளர்கள் நம்புகின்றனர். கூகுள் மேப் ஓபன் செய்ய பயன்படுத்தப்படும் URL போலியாக உருவாக்கி மோசடிகளை சைபர் கிரைம் கும்பல் அரங்கேற்றுகிறது. Google மேப் நிறுவனம் இந்த மோசடிகளை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி