கூகுள் லென்ஸ்!

மிகவும் சுலபமான மொழி
பெயர்ப்பு செயலியாக மார்க்கெட்டில் மாஸ் காட்டுவது கூகுள் லென்ஸ் தான்(Google Lens). குறிப்பாக ஒரு புத்தகம் படிக்கிறீர்கள் எனில் அந்த புத்தகத்தின் மீது கூகுள் லென்ஸ் கேமராவை ஆன் செய்து காண்பித்தாலே போதும் உங்களுக்கு என்ன மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமோ செய்து அந்த வினாடியிலேயே கொடுத்து விடும் வசதி கூகுள் லென்ஸ் செயலியில் இருக்கிறது. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆங்கில புத்தகத்தை படிக்க வேண்டும் ஆனால் ஆங்கிலம் படிக்கத் தெரியாது எனில் உங்களுக்கு எந்த மொழியில் அந்த புத்தகம் வேண்டுமோ அதை தேர்வு செய்து விட்டு கூகுள் லென்ஸ் செயலியின் ஸ்கேனர் ஆப்ஷனை தட்டினால் போதும் புத்தகத்தில் இருக்கும் ஆங்கில வார்த்தைகள் அத்தனையும் உங்களுக்கு தமிழில் காட்டிவிடும். இந்த செயலி மூலம் மொத்த புத்தகத்தையும் நீங்கள் உங்கள் மொழியிலேயே படித்து முடித்து விடலாம். இதிலேயே ஆடியோ என்னும் வசதியை அழுத்தினால் மொழிபெயர்ப்பு செய்வதுடன் கூகுள் லென்ஸ் செயலியே உங்களுக்கு வாசித்தும் காட்டிவிடும். மேலும் இந்த செயலி கொண்டு புகைப்படங்களில் உள்ள வார்த்தைகளையும் கூட தனியே பிரித்து எடுத்துக்கொண்டு பயன்படுத்தவும் முடியும்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு