கூகுள் கீப்!

பள்ளி, கல்லூரிகள் திறப்புக்காலம். பொதுவாக ஒரு நீண்ட விடுமுறை கழித்துச் சென்றாலே அனைத்தும் மறந்துவிடும். இதில் குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கும் மேல் விடுமுறை என்கையில் நிச்சயம் அவர்கள் இயல்பான பள்ளி நாட்களுக்குத் திரும்புவதற்குள் பெற்றோர்களுக்குத்தான் பெரும் போராட்டம். எதை எடுத்து வைப்பது, எதை விடுவது, என்ன கொண்டு போக வேண்டும் போன்ற அனைத்தையும் குழப்பி, குழந்தைகளையும் காலையிலே பரபரப்பாக்கிவிடுவார்கள். அதற்குத்தான் உதவுகிறது கூகுள் கீப் (Google Keep).உங்கள் தினந்தோறும் தேவைகள் துவங்கி, பள்ளி அட்டவணைகள், தேர்வு கால அட்டவணைகள் மற்றும் குறிப்பேடுகள், பிறந்தநாள், திருமணநாள், மற்றும் சிறப்பு நாட்கள் குறித்த எதையும் இதில் குறிப்புகளாக எடுத்து வைத்துக்கொள்ள அதற்கேற்ப நமக்கு அலர்ட் கொடுத்து ஞாபகப்படுத்தும். மேலும் இதில் மருத்துவம் சார்ந்த குறிப்புகள், மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நினைவூட்டல்கள் கூட பதிவு செய்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை