Sunday, October 6, 2024
Home » என்னுடைய நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதநேயர் விஜயகாந்த்: நடிகர் மம்முட்டி புகழாரம்

என்னுடைய நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதநேயர் விஜயகாந்த்: நடிகர் மம்முட்டி புகழாரம்

by Kalaivani Saravanan

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார். விஜயகாந்தின் இறுதி மரியாதை நாளை மாலை 4.45 மணிக்கு கோயம்பேட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்முட்டி: என்னுடைய நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதநேயர் விஜயகாந்த் என்று நடிகர் மம்முட்டி புகழாரம் சூட்டியுள்ளார். விஜயகாந்தை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று நடிகர் மம்முட்டிதெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி: நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த்-ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி, மனைவி விசாலாட்சி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சந்திரபாபு நாயுடு இரங்கல்: நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன்.

விஜயகாந்த் உடலுக்கு ஆளுநர் தமிழிசை அஞ்சலி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி மீது மரியாதை வைத்திருந்தார் விஜயகாந்த் என்று அஞ்சலி செலுத்திய பின் தமிழிசை பேட்டியளித்தார்.

நடிகை கஸ்தூரி இரங்கல்: விஜயகாந்த்தின் மறைவு தமிழக அரசியல், சினிமாவிற்கு பேரிழப்பாகும் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். பலருக்கும் வாழ்வு கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் எனவும் நடிகை கஸ்தூரி புகழாரம் சூட்டியுள்ளார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi