சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 2 நாளில் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதமாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 1ம் தேதி ஒரு சவரன் ரூ.44,560க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமிற்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,450க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,400க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,535க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,280க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.