தங்கம் விலை ரூ.240 குறைந்து சவரன் ரூ.55 ஆயிரத்துக்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதிரடியாக அதிகரிப்பதும், அடுத்து சில தினங்களுக்கு பிறகு பெயரளவுக்கு குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆடி மாதத்தின் முதல் நாளான கடந்த 17ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற புதிய உச்சத்தை அடைந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியியிருந்தது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நேற்று முன்தினம் பெயரளவில் குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,905க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.55,240க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலையில் மேலும் மாற்றம் காணப்பட்டது. நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,875க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்