தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.440 குறைந்தது

சென்னை: இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் ஏற்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதன் உச்சமாக கடந்த 28ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,160 என்று விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. நேற்று முன்தினம் (30ம் தேதி) தங்கம் விலை நகை வாங்குவோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் திடீரென குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.5,735க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.45,880க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.57,15க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.45,720க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாள் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்