தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னை: தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை கண்ட நிலையில் நேற்று பெயரளவுக்கு பவுனுக்கு ரூ.40 குறைந்தது. 27ம் தேதி தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தில் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 7 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.7,095க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.56,760க்கு விற்கப்பட்டது. அதிகரித்தால் ஜெட் வேகமும், குறைந்தால் மட்டும் பெயரளவுக்கு என்பது நகை வாங்குவோரை ஏமாற்றமடைய செய்துள்ளது. நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Related posts

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

காஷ்மீரில் 2 இடங்களில் மோதல்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: போலீஸ் ஏட்டு பலி; 6 வீரர்கள் காயம்

டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி; ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்