Monday, October 7, 2024
Home » இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இறங்குமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

by Mahaprabhu

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. ஜூலை மாதம் தொடங்கிய போதே நகை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஜூலை 8ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஜூலை 9ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6770க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் 54,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.5546க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.44,368க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi