2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் உருவானதை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக அதிகரிப்பதும், அதன் பிறகு சற்று குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.44,440க்கும் விற்கப்பட்டது. 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,530க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,515க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44120க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தண்டவாளத்தில் காஸ் சிலிண்டரை போட்டு காளிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிக்க வைக்க சதி? உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்த சம்பவத்தால் பீதி

தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில் முறைகேடு செய்ததாக பொன்னேரி வட்டார கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

ஆசிரியர்தின நாயகர் இராதாகிருஷ்ணன்