தங்கம், வெள்ளி காசுகள் இறக்குமதி வரி உயர்வு

புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தங்கம், வெள்ளி ஆபரணங்களை இணைப்பதற்கான கொக்கி, திருகாணி போன்ற சிறு நகைகள், விலை உயர்ந்த உலோகங்களில் செய்யப்படும் காசுகள் மீதான இறக்குமதி வரி இனி 15 சதவீதமாக இருக்கும். இதில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதமும், விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி (ஏஐடிசி) 5 சதவீதமும் அடங்கும். இவைகளுக்கு, சமூக நல கூடுதல் கட்டணத்தில் (எஸ்டபிள்யுசி) இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போல, விலையுயர்ந்த உலோகங்களைக் கொண்ட ஸ்பென்ட் கேட்டலிஸ்ட்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்படுகிறது. அடிப்படை சுங்க வரி 10 சதவீதம், ஏஐடிசி 4.35 சதவீதம் உட்பட 14.35 சதவீதமாக இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது. இந்த வரி உயர்வு ஜனவரி 22ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் அமலுக்கு வந்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு