தங்கம் சவரனுக்கு 2 நாளில் ரூ.560 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாளாக சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போரை தொடர்ந்து தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது.  17ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.44,120க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. இந்த மகிழ்ச்சி 2 நாட்கள்தான் நீடித்தது. அதன் பிறகு விலை மீண்டும் அதன் போக்கை காட்ட தொடங்கியுள்ளது.

அதாவது, நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,560க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,180க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,585க்கும், சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,680க்கும் விற்கப்பட்டது. 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. இந்த தொடர் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸ் துருவித் துருவி விசாரணை

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வலுவாக இல்லாததே அதிமுக தோல்விக்கு காரணம் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்ததாக தகவல்