மீண்டும் அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.45,720-க்கு விற்பனை..!

சென்னை: தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலை அதிரடியாக உயர்ந்தால், சில தினங்களுக்கு பிறகு குறைவது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் பெயரளவுக்கு என்ற அளவில் தான் இருந்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 4ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.46,000க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. 5ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.46,200 விற்பனையானது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற புதிய சாதனையையும் படைக்கப்பட்டது. தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்து வந்தது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.

அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5,742க்கும், பவுன் ரூ.45,936க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை திடீரென சரிவை சந்தித்தது. அதாவது, இன்று காலையில் கிராமுக்கு ரூ.37 குறைந்து ஒரு கிராம் ரூ.5,705க்கும், பவுனுக்கு ரூ.296 குறைந்து ஒரு பவுன் ரூ.45,640க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. ஆபரண த்தங்கம் ஒரு கிராம் ரூ.5,715-க்கும் சவரன் ரூ.45,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்