தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது

சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதம் ஜெட் வேகத்தில் அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை கண்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவர53,800க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,795க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,360க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 வரை உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்கப்பட்டது.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு