தங்கம் விலையில் திடீர் மாற்றம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் ஒரு நிலையான விலையில் இல்லாமல் குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,000க்கு விற்பனையானது. தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்தது.

இந்நிலையில் 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,760க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.54,080க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,785க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,280க்கும் விற்கப்பட்டது.

Related posts

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு