தங்கம் விலை அதிரடி; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை அதிரடியாக நேற்று சவரனுக்கு ரூ.640 எகிறியது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த 19ம் தேதி ஒரு சவரன் ரூ.53,520க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து 20ம் தேதி (நேற்று முன்தினம்) ஒரு சவரன் ரூ.53,600 என்று விலை உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,780க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,240க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Related posts

பாதுகாப்பு பணியில் 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட சென்னை விமான நிலைய மோப்ப நாய்க்கு ஓய்வு: பதக்கங்கள் வழங்கி கண்ணீர் மல்க வழியனுப்பினர்

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவரை உயர் பதவியில் நியமிக்காமல் எடப்பாடி பழனிசாமி தடுத்தார்: ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு