தங்கம் விலை 3 நாளில் சவரன் ரூ.640 உயர்வு

சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வருகிறது. சில சமயத்தில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி ஒரு சவரன் ரூ.46,240க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. அதாவது 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.46,480க்கும், 20ம் தேதி ரூ.46,600 என்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றம் இல்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து இருந்தது. அதாவது கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,830க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,880க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை சற்று கலக்கமடைய செய்துள்ளது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது