காட்சி பொருளாக மாறும் தங்கம்.. விண்ணை முட்டும் விலை… ரூ.352 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 46,000ஐ தொட்டது!!

சென்னை: தங்கம் விலை ஒரு பவுன் ரூ. 46,000 தொட்டது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை எப்போதும் சிறப்பாக இருக்கும். இந்நிலையில், கடந்த மாத அட்சய திருதியை நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் ஏப்.22, 23 ஆகிய நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். விற்பனையும் களை கட்டியது. அதை தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கம் கண்டு வந்தது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வேகமாக அதிகரிப்பதும், மெதுவாக குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது, நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.728 அதிகரித்தது. சென்னையில் தங்கத்தின் விலை நேற்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ரூ.5,706க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.728 உயர்ந்து ரூ.45,648க்கு விற்பனையானது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை இன்றும் ரூ.352 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,000ஐ தொட்டது. ஒரு கிராம் ரூ. 44 உயர்ந்து ரூ.5,750க்கு விற்கப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.82.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ரூ.46 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாங்குவார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதேபோன்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related posts

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது ஒன்றிய அரசு

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வாணாபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

வெல்ல போவது யார்? கடந்த 10ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது