தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 குறைந்தது

சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்றும் சவரனுக்கு ரூ.400 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் 17ம் தேதி அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தங்கத்துக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்கப்பட்டது.

தொடர்ந்து 24ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கும், 25ம் தேதி சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும், 26ம் தேதி சவரனுக்கு ரூ.120 குறைந்து சவரன் ரூ.51,320க்கும் விற்கப்பட்டது. அதாவது, கடந்த 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை தங்கம் விலை சவரன் ரூ.3,920 குறைந்தது. இந்த அதிரடி விலைக் குறைவால் தங்க வியாபாரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் விலையில் மாற்றம் இல்லை. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்