தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது. கடந்த 8ம் தேதி திடீரென சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400க்கு விற்கப்பட்டது. 9ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும், 10ம் தேதி சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.54,080க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.480 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,280க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,825க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கும் விற்கப்பட்டது. சிறிது இடைவெளிக்கு பிறகு தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நீலகிரி கூடலூர் அருகே நிலச்சரிவு அபாயம்; நடமாட தடை; நோயாளி, முதியோர் இடமாற்றம்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் மணி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!