ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூ.92க்கு விற்கப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,165-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,320-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த கோரி சென்னையில் மாபெரும் பேரணி: எஸ்டிபிஐ கட்சி தலைவர் அறிவிப்பு

சுவாச பிரச்சனை காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!!

வங்கி கணக்கில் ரூ.2 கோடி பணப்பரிமாற்றம்; அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு