மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.51,560-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய மாற்றத்தை அடைந்து வந்தது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்தின் மீது வரி குறைக்கப்பட்ட நிலையில், தங்கம் விலையானது கணிசமான அளவில் குறைந்தது. அதன் தொடர்ச்சியாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. அதன்படி, தங்கம் விலை இன்று சற்று உயர்ந்து உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,445-க்கும் சவரன் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.89-க்கு விற்பனையாகிறது.

Related posts

ரூ.60 லட்சம் வரி நிலுவை: 2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ரூ.5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

தமிழாசிரியர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா?: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்