ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3.50 உயர்ந்து ரூ.101க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனையானது. இன்றைய (மே 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,210-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,680-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 3.50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி