தங்கம் விலையில் திடீர் மாற்றம்: சவரனுக்கு ரூ.160 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது.  தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் சவரன் ரூ.352 வரை குறைந்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஒரு சவரன் ரூ.43,800க்கு விற்கப்பட்டது. 26ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,840க்கு விற்கப்பட்டது. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. அதாவது, ஒரு கிராம் தங்கம் ரூ.5,480க்கும், சவரன் ரூ.43,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,500க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.44,000க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை திடீர் உயர்வு நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதே நேரத்தில் சில நாட்களுக்கு பிறகு சவரன் ரூ.44 ஆயிரத்தை மீண்டும் தொட்டுள்ளது.

Related posts

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்