தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200 என்ற புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.53,000க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதாவது கடந்த மாதம் 27ம் தேதி முதல் இந்த மாதம் 6ம் தேதி வரை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1560 வரை உயர்ந்தது. இந்த தொடர்ந்து விலையேற்றம் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்து வந்தது.

கடந்த 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் பெயரளவுக்கு குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்தது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.6,770க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கியூட் நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

தொடர்ந்து தங்கம் விலை சரிவு 9 நாளில் சவரனுக்கு ரூ.3,920 குறைந்தது

‘இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை போட்றலாம்’ கொலையாளிகளுக்கு ரூட்டு போட்டுக்கொடுத்து வரவழைத்த மாஜி ஊர்க்காவல்படை வீரர் கைது