ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கு விற்பனை : நகை வாங்குவோர் ஏமாற்றம்!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.கடந்த 23ம் தேதி ஒன்றிய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்கவரி கட்டணத்தை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. சுங்கவரி குறைப்பின் தாக்கத்தால் பட்ஜெட் தாக்கல் செய்த அன்றே தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கு விற்றது. தொடர்ந்து அதிரடியாக சரிவை சந்தித்து வருகிறது.

அதாவது, 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.51,320க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 18ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,920 அளவுக்கு குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதனிடையே இன்று தங்கம் விலை ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720-க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்து ரூ. 6,465க்கு விற்பனை ஆகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலை வீழ்ச்சியால் சற்று நிம்மதி அடைந்த மக்களுக்கு இன்று விலை உயர்வு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை