காட்சி பொருளாக மாறும் தங்கம்… சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.51,640க்கு விற்பனை : ரூ.55,000ஐ தொட்டு விடுமோ? என நகை விரும்பிகள் அச்சம்!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.51,640க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது . இந்த நிலையில் 28ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனையானது. 29ம் தேதி தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை அதிகப்பட்ச விலை என்ற உச்சத்தை தொட்டது. ஆனால் 30ம் தேதி தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை பெயரளவுக்கு கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.50,960க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,455க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது. இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்காக நகை வாங்க காத்திருப்போருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் இப்படியே தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தொட்டு விடுமோ? என்ற ஏக்கமும் நகை வாங்குவோர் இடையே நிலவி வருகிறது. தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்து ரூ.81.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!