2 பிரபல கடைகளுக்கு சொந்தமான 18 கிலோ தங்க நகைகள், 100 கிலோ வெள்ளி பறிமுதல்: காஞ்சிபுரத்தில் பறக்கும் படை அதிரடி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த சோதனையில் 2 பிரபல தங்க நகை கடைகளுக்கு சொந்தமான 18 கிலோ தங்கம் மற்றும் 100 கிலோ வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு வாகனத்தை பறக்கும் படையினர் மடக்கி சோதனையிட்டனர்.

அதில் பிரபல தனியார் நகை கடையில் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10 கிலோ தங்க நகைகள், 58 கிலோ வெள்ளி பொருட்கள் சென்னைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதையெடுத்து அந்த வாகனத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் மற்றொரு பிரபல தங்க நகை கடை வாகனம் பிடிப்பட்டது. அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ தங்கம், 42 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 18 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி