ரூ.1.5 கோடி தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூர், பட்டறை பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழு சார்பில் பிரவீன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். சென்னையில் உள்ள தனியார் நகைக்கடையில் இருந்து திருப்பதியில் உள்ள கடைக்கு நகைகளை கொடுத்துவிட்டு மீதமுள்ள நகைகளை எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

ரூ.1.25 கோடி மதிப்புள்ள 2.15 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.  இதுபோல, தண்டையார்பேட்டையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பைக்கில் வந்த மணலி தனியார் நிதி நிறுவன ஊழியர் ராஜாசிங்கிடம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்