தங்கம் விலையில் மாற்றம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்தது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தினமும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ.54,960க்கு விற்பனையானது. தொடர்ந்து 19ம் தேதி கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,890க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கும் விற்றது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்சம் என்ற உச்சத்தை தொட்டது.
இந்த ஜெட் வேக விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்தது.

இந்நிலையில் 20ம் தேதி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.6,885க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.55,080க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம்(22ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை என்பதால் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலைக்கே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,845க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்