தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு நேற்று ரூ.520 உயர்ந்தது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி ஒரு சவரன் ரூ.53,000க்கு விற்பனையானது.

அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 28ம் தேதி ஒரு சவரன் ரூ.53,328, 29ம் தேதி சவரன் ரூ.53,480, ஜூன் 1ம் தேதி ஒரு சவரன் ரூ.53,480, 2ம் தேதி ஒரு சவரன் ரூ.53,520 என்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.6,695 ஆகவும், சவரன் ரூ.53,560 என்றும் தங்கம் விலை உயர்ந்தது.

நேற்று தங்கம் விலை மேலும் அதிரடி உயர்வை சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,760க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு