கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்திய சாலை பணியாளர்கள் கைது

கோபி : கோபி கோட்டத்தில் சாலை பணியாளர்களாக 210 பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 1997ம் ஆண்டு பணியில் சேர்ந்தனர். ஒரு வருடத்திற்கு பிறகு பணி அமர்த்தப்பட்டனர். ஒரு வருட கால பயிற்சி காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்றும், சாலை பணியாளர்களுக்கான முதுநிலை பட்டியல் முறைகேடாக வெளியிட்டப்பட்டு பதவி உயர்வு முறைகேடாக வழங்கப்படுவதாகவும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்புநிலை தேர்வு அறிவிக்க வேண்டும் என்றும், சாலை பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்க வேண்டும், மழை கோட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கோபி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கோட்ட தலைவர் முருகவேல் தலைமையில், கோட்ட செயலாளர் கருப்புசாமி, மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில செயலாளர் செந்தில்நாதன், மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் உட்பட 100 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை டி.எஸ்.பி பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு(கோபி), நிர்மலா(நம்பியூர்) மற்றும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். கலைந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்களை கைது செய்தனர்.ஒத்துழைப்பு அளிக்காத நிலையில், பெண்கள், குழந்தைகளும் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.கைது நடவடிக்கையின் போது, ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டதால் காவல்துறைக்கும், அவர்களுக்குமிடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!