கோவா அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ: ஒருவர் பலி; மீட்பு பணி தீவிரம்

பனாஜி: கோவா அருகே சரக்கு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஐஎம்டிஜி எனப்படும் சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றி கொண்டு குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் நோக்கி 21 பணியாளர்களுடன் ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. கோவாவின் தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் நேற்று மதியம் வந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கப்பலில் இருந்த பணியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் முடியவில்லை. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தகவலறிந்து இந்திய கடலோர காவல்படையினர் 2 படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கப்பல் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு பணிகள் நடந்து வரும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, சார்ட் சர்கியூட் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

சீசனுக்கு முன்னதாகவே நீலகிரியில் நீர் பனி பொழிவு: தேயிலை விவசாயிகள் அச்சம்

தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்