Wednesday, July 3, 2024
Home » கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக டெட்ரா பாக்கெட்டில் மது விற்க ஆலோசனை: அதிகாரிகள் தகவல்

கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக டெட்ரா பாக்கெட்டில் மது விற்க ஆலோசனை: அதிகாரிகள் தகவல்

by Dhanush Kumar

சென்னை: டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.147 கோடிக்கு மது விற்பனை நடந்து வந்த நிலையில், 500 சில்லரை மதுபான விற்பனை கடைகள் மூடப்பட்டதன் காரணமாக மதுபான விற்பனை 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக டெட்ரா பேக் எனப்படும் காகிதக் குடுவையில் மதுவை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் டெட்ரா பேக் காகிதக் குடுவையில் மது பானம் வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பாட்டிலை வாங்கி 2 பேர் பிரிக்கும்போது தான் அதில் விஷம் உள்ளிட்ட பொருட்கள் கலப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க, 90 மில்லி காகிதக் குடுவையில் மதுபானம் வழங்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளின் விற்பனை தொகை இருப்பை இரவு நேரங்களில் ஊழியர்கள் எடுத்துச் செல்லும்போது பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. அதை தடுக்கும் வகையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வங்கி அதிகாரிகளே நேரடியாக கடைக்கு வந்து பெற்று செல்லும் வகையிலோ அல்லது வாகனங்கள் மூலம் ஒவ்வொரு கடையாக பெறக் கூடிய வகையிலோ நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.

You may also like

Leave a Comment

12 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi